விஸ்வரூபம் எடுக்கும் பெங்களூர்: விராட் கோஹ்லி நம்பிக்கை

விஸ்வரூபம் எடுக்கும் பெங்களூர்: விராட் கோஹ்லி நம்பிக்கை

0 153

வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் பெங்களூர் அணி வலுவானதாக மாறும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் வலுவான அணியாக இருந்தாலும், பந்துவீச்சில் சற்று பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக சொந்த மண்ணில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர்கள் எதிரணியின் 2 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.

அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், மில்னே காயத்தில் அவதிப்படுவது, அந்த அணிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வருண் ஆரோன், அபு நேசிம் போன்றவர்களுக்கு அதிக திறமை உள்ளது. இருப்பினும், இவர்கள் ‘பார்முக்கு’வர சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.

இப்போதைய நிலையில் ஆடம் மில்னே மட்டும் அடுத்த போட்டியில் களமிறங்கலாம். இவர், 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பார் என, நம்புகிறேன்.

இவர்களுடன் மிட்செல் ஸ்டார்க்கும் அணிக்கு திரும்பும்போது, பெங்களூர் விஸ்வரூபம் எடுக்கும் அணியாக மாறி விடும்.

அதுவரையில் இருக்கும் வீரர்களை வைத்து, விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.