இணையதளம் மூலம் ‘ஷொப்பிங்’ செய்ய சுவிஸ் மக்கள் ஆர்வம்: ஆய்வில் தகவல்

இணையதளம் மூலம் ‘ஷொப்பிங்’ செய்ய சுவிஸ் மக்கள் ஆர்வம்: ஆய்வில் தகவல்

0 174

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் இணையதளங்கள் மூலமாக ஷொப்பிங் செய்ய விரும்புவதாக சமீபத்தில் சுவிஸ் புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வில், 16 முதல் 74 வயதுடைய சுமார் 62 சதவிகித மக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இணையதளங்கள் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய சுவிஸ் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே இணையதளங்கள் மூலம் ஹொப்பிங் செய்வதில் பிரித்தானியா 72 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும் டென்மார்க் 66 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மூன்றாம் இடத்தில் உள்ள சுவிஸிற்கு அடுத்தப்படியாக 61 சதவிகிதத்துடன் ஜேர்மனி உள்ளது.

ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இணையதளம் மூலமாக ஷொப்பிங் செய்வதில் சராசரியாக 41 சதவிகிதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இணையதளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதில் சுவிஸ் மக்கள், ஐரோப்பிய நாடுகளின் சராசரி அளவான 19 சதவிகிதத்தை விட குறைவாக 16 சதவிகித அளவிலேயே உள்ளனர்.

இருப்பினும், பொருட்களை வாங்குவதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவதும் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கி சேவைகளை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், இணையதளம் மூலம் ஷொப்பிங் செய்யும்போது ஏற்படும் தொழிநுட்ப குறைபாடுகள், இணையதளங்கள் மூலம் நடைபெறும் பண மோசடிகள் உள்ளிட்டவைகள் 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.