ஏனைய விளையாட்டு செய்தி வாயில் `செல்லோ டேப்’.. பொல்லார்ட் செய்த கொமடியால் அதிர்ந்து போன அரங்கம்

ஏனைய விளையாட்டு செய்தி வாயில் `செல்லோ டேப்’.. பொல்லார்ட் செய்த கொமடியால் அதிர்ந்து போன அரங்கம்

0 167

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட் செய்த கொமடியால் ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 209 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 210 என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் 3வது ஓவரின் போது துடுப்பாட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த பொல்லார்ட்டை அழைத்த நடுவர், ஸ்லெட்ஜிங்கில் (வாக்கு வாதத்தில்) ஈடுபடக்கூடாதென்று எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த வருடம் மிட்செல் ஸ்டார்க் உடன் ஏற்பட்ட மோதலில் அவர் மீது பேட்டை பொல்லார்ட் வீசியது நினைவிருக்கலாம். அதனால் நடுவர் பொல்லார்ட்டை எச்சரிக்கை செய்தார்.

”நான் ஒன்றுமே செய்யவில்லை” என்ற பொல்லார்டிடம் இது வெறும் எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு நடுவர் போய்விட்டார்.

இதனால் கடுப்பான பொல்லார்ட், ஓடிப்போய் ஒரு செல்லோ டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு சமத்துப் பிள்ளையாக மைதானத்துக்குள் வந்தார்.

பொல்லார்டின் இந்த நடவடிக்கையை, ரிக்கி பொண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் பார்த்து சிரித்தனர்.

மேலும் மைதானத்தில் உள்ள பிரம்மாண்டமான திரையிலும் பொல்லார்டின் செல்லோ டேப் ஒட்டிய முகத்தை காட்டினர். இதனால் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது.

கடைசியில், அதே திரையில் ’சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் அடங்கியது.