மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

0 152

700க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற பட­கொன்று மத்­தி­ய­தரைக் கடலில் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வேளையில் மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த பெரு­ம­ள­வானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

இத்­தா­லிய தீவான லம்­பெ­து­ஸாவின் தெற்கே மூழ்­கிய அந்தப் படகில் பயணம் செய்த சுமார் 28 பேர் உயி­ரு டன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் படகில் பய­ணித்­த­வர்­களை மீட் கும் முக­மாக பிர­தான மீட்பு நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

மேற்­படி மீட்பு நட­வ­டிக்­கையில் இத்­தா­லிய கப்­பல்­களும் மத்­தி­ய­தரைக் கடல் தீவான மால்ட்­டாவின் கடற்­படை மற்றும் வர்த்­தக கப்­பல்­களும் ஈடு­பட்­டுள்ள.லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் 27 கிலோ­மீற்­றரும் லம்­பெ­துஸா தீவி­லி­ருந்து 210 கிலோ­மீற்­றரும் தொலை­வான பிராந்­தி­யத்தில் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

கடந்த வாரம் குடி­யேற்­ற­வா­சி­களின் பட­கொன்று மூழ்­கி­யதில் சுமார் 400 பேர் மூழ்கி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கின்ற நிலையில் இடம்­பெற்­றுள்ள இந்தப் புதிய படகு அனர்த்தம் பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

இந்த அனர்த்­தத்தில் பெரு­ம­ள­வான குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக மால்ட்டா பிர­தமர் ஜோசப் மஸ்கட் தெரி­வித்தார்.மேற்­படி படகில் சென்­ற­வர்கள் அவ்­வ­ழி­யாக சென்ற வாணிப கப்­ப­லொன்றின் கவ­னத்தை ஈர்க்க பட­கி­லி­ருந்து குதித்­த­தா­கவும் அவர்­களை மீட்க குறிப்­பிட்ட வாணிப கப்பல் சென்ற போது அந்தப் படகு கவிழ்ந்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் மீட்பு நட­வ­டிக்­கை­களில் மொத்தம் 20 கப்­பல்­களும் 3 உலங்­கு­வா­னூர்­தி­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.உயி­ருடன் மீட்­கப்­பட்­ட­வர்கள் கடா­னியா நகர கடற்­க­ரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.

கடந்த வருடம் வறுமை மற்றும் மோதல்கள் கார­ண­மாக ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 170,000 பேர் ஆபத்து மிக்க கடல் பய­ணத்தை மேற்­கொண்டு இத்தாலியை சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டதாக தரவுகள் கூறுகின்றன.

குடியேற்றவாசிகள் மேற்படி 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுடைய கடல் பரப்பை அளவுக்கதிகமானோரை ஏற்றிச் செல்லும் மோசமான நிலையிலுள்ள பாதுகாப்பற்ற படகுகளில் கடக்க முயற்சிப்பது வழமையாகவுள்ளது.