எகிப்திய முன்னாள் அதிபர் மோர்ஸிக்கு 20 வருட சிறை

எகிப்திய முன்னாள் அதிபர் மோர்ஸிக்கு 20 வருட சிறை

0 158

தான் ஆட்சியில் இருந்தபோது, 2012இல், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை கொல்வதற்காக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களை தூண்டி விட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியே நடந்த மோதலில் செய்தியாளர்களும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டனர்.
தற்போதைய அதிபர் அப்துல் அல் சிசி அவர்களால் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய அதிபர் நீதித்துறை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.