ஓர் இரவு: கமலுக்கு ஓகே சொல்வாரா த்ரிஷா?

ஓர் இரவு: கமலுக்கு ஓகே சொல்வாரா த்ரிஷா?

0 159

கமல் ஹாசன் நடிப்பில் ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்-2′ என வரிசையாக மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்குள் கமலின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஆக்ஷன், த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார். கமலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் இதனை தயாரிக்கவிருக்கிறார். மேலும் படத்திற்கு ‘ஓர் இரவு’ என தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.

இதில் ஹீரோயினாக நடிப்பது குறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். த்ரிஷா ஏற்கெனவே கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘மன்மதன் அம்பு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள். படத்தில் த்ரிஷாவுக்கு ஸ்டைலிஷான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.