கனடாவில் 13-வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு: பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டை

கனடாவில் 13-வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு: பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டை

0 161

கனடாவில் 13-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவத்தில் பொலிசார் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
கனடாவில் ஸ்காபுரோ பகுதியில் சனிக்கிழமை அன்று இரவு 13-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளான்.

தற்போது பொலிசார் இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

பொலிசார் இதுபற்றி கூறுகையில், லோறன்ஸ் அவெனியு மற்றும் ஸ்காபுரோ ஹொல்வ் கிளப் வீதியில் இரவு 10-மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் மீது ஐந்து துப்பாக்கி சூடுகள் சுடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டவர்கள் சிறுவனை இலக்கு வைத்து சுட்டார்களா அல்லது தவறாக அடையாளம் காணப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் அந்த சிறுவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.