கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்

கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்

0 169

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.
சிலரது முகம் பளபளப்பாய் இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி கருமை சூழ்ந்திருக்கும்.

கழுத்தின் கருமையைப் போக்க அழகு நிலையம் சென்று காசை வீணாக்குகின்றனர் இன்றைய கால பெண்கள்.

ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பேக்குகளை செய்து, கழுத்தை பளிச்சென மாற்றலாம்.

எலுமிச்சை

தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும்.

பின்னர் குளித்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

neck_beauty_002

பால்பவுடர் பேக்

முதலில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

இதில் அரை டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும்.

இந்த பேக்கை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கழுத்தின் கருமை வெகுவாக மறையும்.


neck_beauty_003

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும்.

அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து கொள்ளவும்.

பிறகு அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

neck_beauty_004

தக்காளி பேக்

தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும்.

இந்த பேக்கை தினசரி போட்டால், சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.

neck_beauty_009

ஆரஞ்சு பேக்

ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும்.

இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என மாறும்.

neck_beauty_006

ஓட்ஸ் பேக்

ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக்கை தயாரிக்கவும்.

தினமும் இந்த பேக்கை போடுவதன் மூலம், கழுத்து கருமைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

neck_beauty_007

 

 

 

மஞ்சள் பேக்

சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேக் போட வேண்டும்.

இதை கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்தால் விரைவான பலன் கிடைக்கும்.

 

neck_beauty_008