மாயத்தோற்றத்தை உண்டாக்கும் மந்திரக்காரி!

மாயத்தோற்றத்தை உண்டாக்கும் மந்திரக்காரி!

0 159

ஜப்பானின் டோக்கியாவைச் சேர்ந்த ஹைகரு சோ என்ற இளம் மாணவி ஆப்டிகல் இல்யூஸன் எனப்படும் மாயத் தோற்றத்தில் கில்லாடியாக விளங்குகிறார்.

20 வயதான ஹைகரு சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது முப்பரிமாண ஓவியங்களை வரைவதில் வல்லவராக உள்ளார்.

இவ்வாறு வரையப்படும் படங்களின் மூலம் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று அனைவரையும் கவர்ந்து இழுக்கிறார்.

முழுவதும் முப்பரிமாணத்தில் காணப்படும் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்வதோடு, தற்போது உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிய கலையால் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இவர், பல்வேறு சமூக அக்கறை கொண்ட படங்களையும் வரைந்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களின் நிலைகளை பல்வேறு ஓவியங்களாக வரைந்து காட்சிபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வரையும் ஓவியங்களில், கழுத்தில் கறுப்பு மையைப் பூசி, பின்பக்கமும் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டால் கழுத்து இல்லாத உடல் போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதேபோல் கழுத்தில் ஸ்பிரிங் போன்று வரைந்துவிட்டால், ஸ்பிரிங்கில் தலை நிற்பது போல மாயத்தோற்றத்தைத் தருகிறது.

மூடிய கண் மீது, பச்சை வண்ண திறந்த கண்ணை வரைந்தால் அது வேறொரு விதமான தோற்றத்தைத் தருகிறது.

இது பற்றி ஹைகரு சோ கூறுகையில், அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இப்படி மாயத்தோற்றங்களை எளிதாக உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.