‘உலகக் கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில் வாக்கெடுப்பு முறைகேடுகள் இல்லை’

  0 99

  இதில் தொடர்புடைய அனைவருடனும் தம்மால் பேச இயலவில்லை என்பதால், இதற்கான வாக்குகள் வாங்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும் இந்த விசாரணையை மேற்கொண்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இது குறித்து விசாரிக்கும்படி, ஜெர்மன் கால்பந்தாட்டக் கழகம் இந்த சட்ட நிறுவனத்திடம் கோரியிருந்தது.

  2005ஆம் ஆண்டு, ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு 6.7 மில்லியன் யூரோ கொடுத்திருந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விசாரணை அறிவிக்கப்பட்டது.

  இந்த நிதி எதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து, உலக கோப்பை ஏற்பாட்டுக் குழு தவறான தகவலைத் தந்ததாக இந்த விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

  (BBC)