Monday, August 21, 2017
உள்நாட்டு

0 96

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  31 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின்போது  உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு  மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு  விளக்கம் அளிக்கவுள்ளார்.

செய்ட் அல் ஹுசேன் தனது உரையில்  இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை  அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு  தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரழ் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.

எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என  கூறப்படுகின்றது.  அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட  சர்வதேச நிறுவனங்கள்  இலங்கை   தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளன.   ஏற்கனவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் ஒன்றை நிறுவவேண்டும் என  சர்வதேச  மன்னிப்புச் சபை  தெரிவித்துள்ளது.

இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி  ரவிநாத ஆரியசிங்க  தலைமையிலான குழுவினர்  31 ஆவது கூட்டத்  தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள்,  முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.

0 97

அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது.

இருப்பினும், இவர்கள் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் யாருக்கு அதிகம் இழப்பு?

ஆஸ்கார் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடாமி விருதுகள் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது.

சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

அந்த விருதுகளுக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் யாரென்பதை மனதில் வைத்தே ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு பல பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டும் விருதுகளுக்கு “வெள்ளையடிக்கப்பட்டன” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

0 109

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் முகச்சவரம் (க்ளீள் ஷேவ்) செய்திருக்க வேண்டும், ரீசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் கலைப்பீட அறிவித்தல் பலகைகளின் ஊடாக தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

 

இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

யாழ். பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைகழகத்திலும் சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ஞானகுமாரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

 

இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 

இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிவகாந்தன் தனுஜன், மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்டி வருவதை மாணவ பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டபோதிலும் பிற கட்டுப்பாடுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார்.

 

மாணவிகளை மாத்திரம் சேலை கட்டி வருமாறு கூறுவதை ஆணாதிக்க நடைமுறையாகக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

 

மாணவிகள் தரப்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி டினோஷா ராஜேந்திரன், கிழமையில் ஒருநாள் சேலை அணிவது தொடர்பில் மாணவிகளிடம் எவரும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறினார்.

0 83

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை, இந்திய அணிகள் தலா 5 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் கிண்ணத்தை கைப்பற்றி உள்ளன.

 

ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டுவந்த இந்த போட்டி முறை முதல் முறையாக இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படுகிறது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் நடைபெறுவதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஆண்டு இந்த முடிவை எடுத்தது. இனி வரும் காலகட்டங்களில் ஒருநாள் போட்டி, இருபதுக்கு 20 என்று சுழற்சி முறையில் ஆசியக் கிண்ணப் போட்டி நடைபெறும்.

 

முதலாவது இருபதுக்கு 20 ஆசிய கிண்ணப் போட்டி பங்களாதேஷில் இன்று தொடங்குகிறது.

 

மார்ச் 6ஆம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.

 

இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, போட்டியை நடத்தும் பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி மட்டும் தகுதி சுற்று மூலம் நுழைந்துள்ளது. அந்த அணி தகுதி சுற்றில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் (ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், ஓமான்) அணிகளை வென்று இருந்தது.

 

இந்தப்போட்டி Round Robin முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

0 116

அந்த ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்றும், அது கூடவே கூடாது என்றும் அமைச்சரவைக்குள்ளே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன.

 

இந்நிலையிலேயே, ‘உள்ளே-வெளியே’ எனும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறும் என, பிரதமர் டேவிட் கேமரன் சனிக்கிழமை அறிவித்தார்.

 

மறுசீரமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என்பதை ஆதரித்து தாம் பிராச்சாரம் செய்யவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருக்க வேண்டும் என பிரதமர் கருத்து தெரிவித்தாலும், அதற்கு அமைச்சரவையில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் சிலரும் வாதிட்டுள்ளனர். அவ்வாறே தாங்கள் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

 

நீண்ட இழுபறியுடன் நிறைவடைந்த பிரஸல்ஸ் மாநாட்டில், பிரிட்டன் தொடர்ந்தும் தனது சொந்த நாணயமான பவுண்டை நிரந்தரமாக பயன்படுத்தவும், சில கடுமையான நிபந்தனைகளுடனேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருக்க முடியும் எனும் நிலைப்பாட்டை டேவிட் கேமரன் எடுத்துள்ளார்.

 

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுபவர்களுக்கு, பிரிட்டனின் சமூகநல திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் பிரசல்ஸ் மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனின் ஆட்சித் தலைவி, ஏங்கலா மெர்கல் தாம் வழங்கியுள்ள திட்டம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீட்டித்திருப்பதற்கான பிரச்சாரங்களை டேவிட் கேமரன் மேற்கொள்ள உதவும் என்றார்.

0 99

(BBC) இலங்கையில் வடக்கு மாகாணசபைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அந்த மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தனது பதவியை பொறுப்பேற்ற அவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

இங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன் ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மும்மொழிகளிலும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே உரையாற்றினார்.

 

வடபகுதி மக்களின் காணி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தான் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய தன்னால் முடிந்த நடவடிக்கையை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

 

சந்தேகங்களை நீக்கி நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சபைக்கும் முதலமைச்சருக்கும் ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனவும் தெரிவித்தார்.

 

ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மொழி பேசத் தெரிந்தவராக இருப்பதாலும் இதர அரசியல் அனுபவங்கள் இருப்பதாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் பணியாற்றுவார் என்று இங்கு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார்.

 

இதனிடையே, புதிய ஆளுநர் அதிகாரங்களை மக்கள் பிரதிநிதிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் என்று இங்கு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார்

0 47

ஆர்.ஏ.எஃப் ஜெட் விமானம் இடைமறித்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஜெட் விமானங்கள் இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள லின்கோல்ஷிர் நாட்டின் கோனிங்ஸ்பை ராயல் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற கூறப்படுகிறது.

 

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் தைபூன் ஜெட் விமானங்களால் இடைமறிக்கப்பட்டது.

 

இங்கிலாந்து எல்லைக்குள் பறக்க முயன்றதாக கடந்த 12 மாதங்களில் மட்டும் ரஷ்ய போர் விமானங்கள் இதுவரை 6 முறை இடைமறிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு காரணங்களுக்காகவே போர் விமானங்கள் சுற்றி வந்ததாகவும், இங்கிலாந்து எல்லைப் பகுதிக்குள் நுழையவில்லை என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்

0 42

தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா மீதான தேசத் துரோக வழக்கு விசாரணைக்காக வந்தபோது, வழக்கறிஞர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\

அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, பத்திரிகையாளர் ஒருவரும் நீதிமன்ற வாசலில் வைத்துத் தாக்கப்பட்டார். காவல்துறையினர் அந்தத் தாக்குதலைத் தடுக்க முனையவில்லை என அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அப்ஸல் குரு 2013ஆம் ஆண்டில்தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தியதற்காக கண்ணைய்யா கைதுசெய்யப்பட்டார். இந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு முன்பும் கண்ணைய்யா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால் உச்ச நீதிமன்றம் கடும் விதிமுறைகளை விதித்திருந்தது.

இன்று நடந்த சம்பவத்தையடுத்து நிலைமையை அறிந்துகொள்ள வழக்கறிஞர்களின் குழு ஒன்று பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

0 32

கூட்டு எதிரணியின் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தயாராகி வருகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணி அமைத்து செயற்படும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்கு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் தொடர்ந்தும் தனித்து செயற்படுவார்களாயின் அவர்களை கட்சியில் இருந்து இடைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அலுவலகம் திறந்ததும் அவருடன் இணைந்து செயற்படுவதும் எந்த வகையில் கட்சியின் ஒழுக்கத்திற்கு முரணானது என்பதை முதலில் கூற வேண்டும். அதன் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை யாருக்கு அவசியம் என பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

0 40

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்து உள்ளக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஆதரவு தெரிவித்ததன் மூலம் நாம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம். அத்துடன் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட கனவு கண்டவர்களின் நோக்கம் தவிடுபொடியாகிவிட்டது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் அல் ஹுசேனுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பிட்டகோட்டையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலளார் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

RANDOM POSTS

0 154
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும்...