Monday, August 21, 2017
விநோத

தேசிய அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யர்­களின் கருத்­துகள் உட்­பட யோச­னை­களை உள்­வாங்கும் முக­மாக விசேட நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அர­சிய­ல­­மைப்பு தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் நிபுணர் குழு தெரி­வித்­தது.

 

வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யரின் கருத்­துக்கள் மற்றும் யோச­னை­களை காணொளி மூல­மாக பெற்­று­கொள்­வ­தற்­கான கோரிக்­கையை பிர­த­ம­ரிடம் விடுத்­துள்­ள­தா­கவும் அக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

 

கொழும்பு 02 இல் அமைந்­துள்ள அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கருத்­து­களை உள்­வாங்கும் நிபுணர் குழுவின் அலு­வ­ல­கத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அர­சி­ய­மைப்பு தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் குழுவின் தலைவர் லால் விஜே­ய­நா­யக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் தொடர்ந்து உறை­யாற்­று­கையில்.

 

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்­க­ளி­னது யோச­னைகள் உட்­பட கருத்­து­களை உள்­வாங்கும் செயற்­பா­டுகள் நாட­ளா­விய ரீதியில் சிறந்த முறையில் எமது குழு­வி­ன­ரினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் உள்­நாட்டு மக்கள் உட்­பட புதிய அர­சி­ல­மைப்பில் வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யர்­க­ளி­னதும் கருத்­துக்­க­ளையும் யோச­னை­க­ளையும் உள்­வாங்கும் முக­மாக விசேட நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

 

எதிர்­வரும் மார்ச் மாதம் இவர்­க­ளி­ட­மி­ருந்து கானொளி மூலம் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கருத்­துகள் உட்­பட யோச­னை­களை உள்­வாங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்­கை­யொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது.

 

ஒரு நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று ஸ்தாபிக்­கப்­படும் தரு­ணத்தில் நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் யோச­னைகள் உட்­பட கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்­த­வ­கையில் எமது நாட்டில் குடி­யு­ரிமை பெற்று வெளி­நாட்டில் வேலை நிமித்­த­மாக பல்­வேறு நாடு­களில் இலங்­கை­யர்கள் வாழ்­கின்­றனர். குறிப்­பாக பலர் ஜரோப்­பிய நாடு­களில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளாக வாழ்­வ­தோடு பெரு­பான்­மை­யி­னத்­த­வர்­களும் வாழ்­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­களின் உத­விகள் மற்றும் யோச­னைகள் அர­சி­ய­ல­மைப்­பிற்கும், நல்­லி­ண­கத்­திற்கும் அவ­சி­ய­மாகும்.

 

எனவே, வெளி­நாட்­டுவாழ் இலங்­கை­யர்­களின் கருத்­து­களை புதிய அர­ச­மைப்பில் உள்­ள­டக்­கு­வது தொடர்­பி­லான கோரிக்­கையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைத்­துள்ளோம். அதற்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்குவார் என்றே எதிர்பார்க்கின்றோம். பிரதமரின் அங்கீகாரத்தின் பின்னர் மார்ச் மாதத்தின் இறுதியில் நாங்கள் வெளிநாட்டுவாழ் இலங்கையர்களிடம் கானோளி அழைப்பு மூலம் கருத்துகளை கோருவதோடு உள்நாட்டிலும் இன்னும் பல மாவட்டங்களில் கருத்துகணிப்பிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

0 190

வட்ஸ்அப் என்பது இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இதனை பயன்படுத்தி செயற்பாட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனைத் தொட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 60 கோடியை எட்டிய வட்ஸ்அப் ஜனவரி மாதம் 70 கோடியை தாண்டியது. தற்போது 80 கோடியை தொட்டுள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களான ட்விட்டர் (28.8 கோடி), பேஸ்புக் (138 கோடி), இன்ஸ்டாகிராம் (30 கோடி) செயற்பாட்டு பாவனையாளர்களைத்(active users) தக்கவைத்துள்ளது.

தற்போது வட்ஸ்அப்பில் தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 158

ஜப்பானின் டோக்கியாவைச் சேர்ந்த ஹைகரு சோ என்ற இளம் மாணவி ஆப்டிகல் இல்யூஸன் எனப்படும் மாயத் தோற்றத்தில் கில்லாடியாக விளங்குகிறார்.

20 வயதான ஹைகரு சோ தன்னுடைய கற்பனை மூலம் மனித உடல் மீது முப்பரிமாண ஓவியங்களை வரைவதில் வல்லவராக உள்ளார்.

இவ்வாறு வரையப்படும் படங்களின் மூலம் மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று அனைவரையும் கவர்ந்து இழுக்கிறார்.

முழுவதும் முப்பரிமாணத்தில் காணப்படும் இவரது ஓவியங்கள் பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்வதோடு, தற்போது உலகம் முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிய கலையால் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இவர், பல்வேறு சமூக அக்கறை கொண்ட படங்களையும் வரைந்துள்ளார்.

சமீபத்தில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களின் நிலைகளை பல்வேறு ஓவியங்களாக வரைந்து காட்சிபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வரையும் ஓவியங்களில், கழுத்தில் கறுப்பு மையைப் பூசி, பின்பக்கமும் கறுப்புத் துணியைக் கட்டிவிட்டால் கழுத்து இல்லாத உடல் போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதேபோல் கழுத்தில் ஸ்பிரிங் போன்று வரைந்துவிட்டால், ஸ்பிரிங்கில் தலை நிற்பது போல மாயத்தோற்றத்தைத் தருகிறது.

மூடிய கண் மீது, பச்சை வண்ண திறந்த கண்ணை வரைந்தால் அது வேறொரு விதமான தோற்றத்தைத் தருகிறது.

இது பற்றி ஹைகரு சோ கூறுகையில், அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு இப்படி மாயத்தோற்றங்களை எளிதாக உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

0 158

கமல் ஹாசன் நடிப்பில் ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்-2′ என வரிசையாக மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்குள் கமலின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஆக்ஷன், த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார். கமலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் இதனை தயாரிக்கவிருக்கிறார். மேலும் படத்திற்கு ‘ஓர் இரவு’ என தலைப்பு வைத்திருக்கிறார்களாம்.

இதில் ஹீரோயினாக நடிப்பது குறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். த்ரிஷா ஏற்கெனவே கமல்ஹாசனுக்கு ஜோடியாக ‘மன்மதன் அம்பு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள். படத்தில் த்ரிஷாவுக்கு ஸ்டைலிஷான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 168

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.
சிலரது முகம் பளபளப்பாய் இருக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி கருமை சூழ்ந்திருக்கும்.

கழுத்தின் கருமையைப் போக்க அழகு நிலையம் சென்று காசை வீணாக்குகின்றனர் இன்றைய கால பெண்கள்.

ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பேக்குகளை செய்து, கழுத்தை பளிச்சென மாற்றலாம்.

எலுமிச்சை

தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும்.

பின்னர் குளித்தால் கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

neck_beauty_002

பால்பவுடர் பேக்

முதலில் ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

இதில் அரை டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும்.

இந்த பேக்கை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி கழுத்தின் கருமை வெகுவாக மறையும்.


neck_beauty_003

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும்.

அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து கொள்ளவும்.

பிறகு அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.

neck_beauty_004

தக்காளி பேக்

தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும்.

இந்த பேக்கை தினசரி போட்டால், சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.

neck_beauty_009

ஆரஞ்சு பேக்

ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும்.

இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என மாறும்.

neck_beauty_006

ஓட்ஸ் பேக்

ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக்கை தயாரிக்கவும்.

தினமும் இந்த பேக்கை போடுவதன் மூலம், கழுத்து கருமைக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

neck_beauty_007

 

 

 

மஞ்சள் பேக்

சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேக் போட வேண்டும்.

இதை கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்தால் விரைவான பலன் கிடைக்கும்.

 

neck_beauty_008

 

 

 

0 138

உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதன் விளைவாக ஜார்ஜியா தொழில்நுட்ப பல்லைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டாம் அளவில் இருக்கும் காகித ஒலிவாங்கியை தயாரித்துள்ளார்கள். போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த குறைந்த அளவிளான மின் ஆற்றலை கொண்டு முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய முடியாது.

உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலின் அளவானது ஒலிவாங்கியின் அளவை பொறுத்து மாறுப்படும். தற்போது ஒரு சதுர மீட்டருக்கு 121 மில்லிவாட்ஸில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையில்லாமல் அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலிவாங்கியை வைத்து மின் உற்பத்தியிலும் ஈடுபடமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

0 86

டோலிவுட் மற்றம் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

அந்த வகையில் சமீபத்தில் ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார்.

இந்த நகைகளை விற்பனை செய்வதற்காக www.witengold.com என்ற புதிய இணையதளத்தை தமன்னா தொடங்கியுள்ளார். அட்சய திருதியை விழா நாளை வருவதை முன்னிட்டு இன்றே தமன்னாவின் இணையதளம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.

தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவுடன் சேர்ந்து இந்த இணையதளத்தை தொடங்கியுள்ள தமன்னா கூறுகையில், எனது தந்தை நகை வியாபாரத்தில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே நகை வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதலில் நான் வடிவமைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது.

எனவே வடிவமைக்கும் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். இன்றைய பெண் தலைமுறையினருக்கு ஏற்றவாறு எனது வடிவமைப்புகள் இருக்கும். நான் வடிவமைக்கும் நகைகள் அழகாகவும், சமகாலத்திற்கு ஏற்றதாகவும், அனைத்து விழாக்களின் போது அணிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

0 61

இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.
இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது.

ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம்.

வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு.

அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள்

சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.

நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத் தண்டு உதவியாக இருக்கும்.

இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு ஜூஸை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், விரைவாக உடல் எடை குறையும். மேலும் மலச்சிக்கலும் உடனே குணமாகும்.bananaleaf_juice_003

0 80

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்குமான உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது அண்மைக்கால தகவல்கள். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போகிறார்கள். அதில் நடித்த எல்லாரையும் இதிலும் நடிக்க வைக்க வேண்டும் என்கிற விருப்பம் தானாகவே வரும்தானே? அப்படியொரு விருப்பம் தயாரிப்பாளர் தரப்புக்கு வந்ததாம். ஆர்யாவின் சம்மதத்தில்தான் இப்படியொரு முயற்சியே ஆரம்பம் ஆனது.

அதனால் அவர் பிரச்சினையில்லை. சந்தானமும் ஓ.கே. சொல்லிவிட்டார். நயன்தாராவைக் கேட்டபோது, கிடைத்த பதில்தான் அதிர்ச்சி ரகம். “ம்ஹூம். ஆர்யான்னா முடியவே முடியாது,” என்று கூறிவிட்டாராம். பொதுவாக சம்பள ஆசை காட்டினால் எந்தப் பாம்பும் படமெடுப்பதைச் சுருக்கிக்கொள்ளுமல்லவா? அதற்கும் மசியவில்லை நயன்தாரா. இதில் ஆர்யா உள்ளிட்ட அனைவரும் ‘அப்செட்’. அதற்காக காலம் எப்போதும் ஒரே மாதிரியா இருக்கிறது?

ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ஆர்யா. அதில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று விரும்பினாராம் விஜய். ஆனால் முதலில் அந்த முயற்சியைத் தடுத்தது ஆர்யாதானாம். “வேற யாரை வேணும்னாலும் நாயகியாக நடிக்க வையுங்கள். ஆனால் நயன்தாரா மட்டும் வேணாம்,” என்றாராம்.

கோடம்பாக்கத்துல என்னய்யா நடக்குது? என்று அப்பகுதி பிரமுகர்களே ஆச்சரியப்படுகிறார்கள். போகட்டும். இது இன்னொரு நடிகை ஒரு படத்தில் நடிக்க மறுத்தது பற்றிய தகவல்.

0 335

அகத்திக்கீரை– ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை– சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை– தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்கரிசலைசள் – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை– பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை– ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை– உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை– ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை– ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை– விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை– கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை– மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை– பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை
– பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை– வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை– சளியை அகற்றும்.

நருதாளிகீரை– ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

 

 

 

 

 

RANDOM POSTS

0 154
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும்...