Monday, August 21, 2017
விளையாட்டு

0 142

டெல்­லியை எதிர்­கொண்ட கொல்­கத்தா 6 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று தனது மூன்­றா­வது வெற்­றியை பதிவு செய்­து­கொண்­டுள்­ளது.
டெல்­லியில் நேற்று நடை­பெற்ற ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 தொடரின் 17ஆவது லீக் போட்­டியில் டெல்லி டேர்­டெவில்ஸ் மற்றும் கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ் அணிகள் மோதி­யி­ருந்­தன.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய டெல்லி டேர்­டெவில்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 146 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­டது. அவ்­வணி சார்­பாக மனோஜ் திவாரி 5 நான்கு ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 32 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாகப் பெற்­றார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா, மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா 2 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய கொல்­கத்தா அணி 18.1 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்­றி­யி­லக்கை அடைந்­தது.

அவ்­வணி சார்­பாக அணித்­த­லை­வரும் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீர­ரு­மான கௌதம் கம்பீர் 8 நான்கு ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 60 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்றார். இவ­ருக்கு துணை­யாக யூசுப்­பதான் 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத் தாவின் உமேஷ் யாதவ் தெரிவானார்.

0 166

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட் செய்த கொமடியால் ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 209 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 210 என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் 3வது ஓவரின் போது துடுப்பாட்டக்காரர் கிறிஸ் கெய்லுக்கு அருகில் களத்தடுப்பு செய்து கொண்டிருந்த பொல்லார்ட்டை அழைத்த நடுவர், ஸ்லெட்ஜிங்கில் (வாக்கு வாதத்தில்) ஈடுபடக்கூடாதென்று எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த வருடம் மிட்செல் ஸ்டார்க் உடன் ஏற்பட்ட மோதலில் அவர் மீது பேட்டை பொல்லார்ட் வீசியது நினைவிருக்கலாம். அதனால் நடுவர் பொல்லார்ட்டை எச்சரிக்கை செய்தார்.

”நான் ஒன்றுமே செய்யவில்லை” என்ற பொல்லார்டிடம் இது வெறும் எச்சரிக்கை என்று சொல்லிவிட்டு நடுவர் போய்விட்டார்.

இதனால் கடுப்பான பொல்லார்ட், ஓடிப்போய் ஒரு செல்லோ டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு சமத்துப் பிள்ளையாக மைதானத்துக்குள் வந்தார்.

பொல்லார்டின் இந்த நடவடிக்கையை, ரிக்கி பொண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் பார்த்து சிரித்தனர்.

மேலும் மைதானத்தில் உள்ள பிரம்மாண்டமான திரையிலும் பொல்லார்டின் செல்லோ டேப் ஒட்டிய முகத்தை காட்டினர். இதனால் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் அரங்கத்தை அதிர வைத்தது.

கடைசியில், அதே திரையில் ’சைலன்ஸ் ப்ளீஸ்’ என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் அடங்கியது.

0 143

ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் நன்ட்விச் கழகத்திற்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடிய 21 வயதான லியாம் லிவிங்ஸ்டன் 138 பந்துகளில் 350 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

நன்ட்விச் மற்றும் கல்டி கழக அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கழக மட்டத்திலான போட்டியின் போதே இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டனால் பெறப்பட்ட 350 ஓட்டங்களில் 34 நான்கு ஓட்டங்களும் 27 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

இப்போட்டியில் நன்ட்விச் கழக அணி 45 ஓவர்களில் 579 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்டி கழக அணி 79 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து, 500 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 157

ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 3-வது முதல் 7-வது இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (112 புள்ளி), இலங்கை (108), நியூசிலாந்து (107), இங்கிலாந்து (101), பாகிஸ்தான் (95) ஆகிய அணிகள் உள்ளன. இதில் நாளை தொடங்கும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தால் 7-வது இடத்தையும் இழக்க நேரிடும். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் விராட் கோலி 4-வது இடத்திலும், ஷிகர் தவான் 6-வது இடத்திலும், கேப்டன் டோனி 8-வது இடத்திலும் உள்ளனர். அதே சமயம் டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்தியர்கள் யாருக்கும் இடமில்லை. இதில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய தரப்பில் சிறந்த நிலையில் முகமது ஷமி 11-வது இடத்தில் உள்ளார்.

0 147

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் அதிரடி வீரர் ஷேவாக் டி20 கிரிக்கெட் போட்டியில் 4000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் ஷேவாக் 47 ஓட்டங்கள் குவித்திருந்தார்.

அவர் 15 ஓட்டங்கள் எடுத்த போது டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் எடுத்த 25வது வீரர் ஆனார். அவர் இதுவரை 151 போட்டிகளில் விளையாடி 4,032 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாது ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக முறை (438 முறை, 99 போட்டி, 332 பவுண்டரி, 106 சிக்சர்) பந்தை எல்லை கோட்டுக்கு வெளியே அனுப்பிய வீரர்களில் முதலிடம் பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூர் வீரர் கிறிஸ் கெய்ல் (70 போட்டி, 232 பவுண்டரி, 200 சிக்சர்) உள்ளார்.

0 152

வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தில் இருந்து மீண்டு வந்தால் பெங்களூர் அணி வலுவானதாக மாறும் என்று அணித்தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி, முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் வலுவான அணியாக இருந்தாலும், பந்துவீச்சில் சற்று பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக சொந்த மண்ணில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர்கள் எதிரணியின் 2 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர்.

அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், மில்னே காயத்தில் அவதிப்படுவது, அந்த அணிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வருண் ஆரோன், அபு நேசிம் போன்றவர்களுக்கு அதிக திறமை உள்ளது. இருப்பினும், இவர்கள் ‘பார்முக்கு’வர சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது.

இப்போதைய நிலையில் ஆடம் மில்னே மட்டும் அடுத்த போட்டியில் களமிறங்கலாம். இவர், 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருப்பார் என, நம்புகிறேன்.

இவர்களுடன் மிட்செல் ஸ்டார்க்கும் அணிக்கு திரும்பும்போது, பெங்களூர் விஸ்வரூபம் எடுக்கும் அணியாக மாறி விடும்.

அதுவரையில் இருக்கும் வீரர்களை வைத்து, விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

0 57

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் அனுபவ ஆலோசனைகள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ஐதராபாத் அணி பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் குறித்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பட்சத்தில் 160 ஓட்டங்கள் வரை எடுக்கலாம் என நினைக்கிறேன்.

லோகேஷ் ராகுல், நமன் ஓஜா உள்பட சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளது வெற்றிக்கு வழிவகுக்கும்.

புவனேஷ்வர் கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடியுள்ளார். அவரது பந்துவீச்சு கடந்த 4 மாதங்களாக மிகவும் சிறப்பாக உள்ளது நம்பிக்கை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்­டியின் முதல் லீக் ஆட்­டத்தில் 168 ஓட்­டங்கள் குவித்த மும்பை அணி, கொல்­கத்தா அணி­யிடம் வீழ்ந்­தது.
மும்பை அணி நிர்­ண­யித்த 168 என்ற வெற்றி இலக்கை துரத்­திய கொல்­கத்தா அணி 18.3 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து வெற்­றி­யீட்­டி­யது.

8ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டம் கொல்­கத்தா ஈடன் கார்­டனில் நேற்று இரவு 8 மணிக்கு ஆரம்­ப­மா­னது. இதில் நடப்பு சம்­பி­ய­னான கம்பீர் தலை­மை­யி­லான கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ், ரோகித் சர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தியன்ஸ் அணிகள் கள­மி­றங்­கின.

இரு அணி­களும் சம பலம் பொருந்­தி­யவை என்­பதால் ஆட்டம் விறு­வி­றுப்­பாக இருந்­தது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மும்பை அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக ரோஹித் சர்மாஇ பிஞ்ச் ஆகியோர் கள­மி­றங்­கினர். பிஞ்ச் 5 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

இதை­ய­டுத்து கள­மி­றங்­கிய ஆதித்ய டாரேஇ ரோஹித்தின் அதி­ர­டிக்கு துணை நின்றார். ரோஹித் சர்மா ஆட்­ட­மி­ழக்­காமல் 98 ஓட்­டங்­களை விளா­சினார்.

ரோஹித்­துடன் பின்இணைந்த ஆண்­டர்சன் பொறுப்­புடன் ஆடி­யதால் ஓட்ட எண்­ணிக்கை உயர்ந்­தது. ஆண்­டர்சன் தனது பங்­கிற்கு பந்­து­களை பவுண்­டரிஇ சிக்­சர்­க­ளாக விளாசி அரைச் சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்­பிற்கு 168 ஓட்­டங்­களைக் குவித்­தது. இதை­ய­டுத்து 169 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் கள­மி­றங்­கி­யது.

அதன்­படி கொல்­கத்தா அணி 18.3 ஓவர்­களில் மூன்று விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது.

கொல்­கத்தா அணியின் தலைவர் கம்பிர் 57 ஓட்­டங்­களைப் பெற்றார். உத்­தப்பா(9), பாண்டே(40), யாதவ் ஆட்­ட­மி­ழக்­காமல் 46 ஓட்­டங்­க­ளையும், பத்தான் ஆட்­ட­மி­ழக்­காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர். அதன்படி எட்டாவது லீக் ஆட்டத்தின் முதலாவது போட்டியில் கொல்கத்தா அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது.

கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியானதாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா, 65 பந்தில் 98 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 3000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை நேற்று ரோஹித் சர்மா (113 போட்டி, 3001 ஓட்டங்கள்) பெற்றார்.

இவர் இந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய இரண்டு இன்னிங்சில் 238 பந்துகளில் 362 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்தில் 264 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

மேலும், ஈடனில் மட்டும் அனைத்து விதமான போட்டிகளில் சேர்த்து 4 சதம், ஒரு அரைசதம் உட்பட ஒட்டுமொத்தமாக 919 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 102.1 ஆகும்.kkr_mi_007

உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் எட்டாவது ஐபிஎல் தொடரின் தொடக்கவிழா இன்றிரவு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
எட்டாவது இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்) தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்றிரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக தொடக்க விழா நடைபெறவுள்ளது


images (4)

“இந்தியாவின் விழா” என்ற பெயரில் சுமார் 2 மணி நேரம் விழா நடக்கவுள்ளது.

நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை சிறப்பிக்கும் வகையில் ஸ்பெஷல் நிகழ்ச்சியும், நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

 

ipl_cermony_004

 

 

இந்நிலையில் கொல்கத்தாவில் மதியத்திற்கு பின் இடியுடன் கூடிய மழை வர 60 சதவீத வாய்ப்புள்ளதாகவும், இரவிலும் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாளை முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றிலும் 5000 பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீரர்கள் ‘டிரசிங் ரூம்’ மற்றும் முழு மைதானத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி கமெராவும் பொருத்தப்பட்டுள்ளன.

RANDOM POSTS

0 154
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும்...