Monday, August 21, 2017
வெளிநாட்டு

0 160

கனடாவில் 13-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவத்தில் பொலிசார் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
கனடாவில் ஸ்காபுரோ பகுதியில் சனிக்கிழமை அன்று இரவு 13-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளான்.

தற்போது பொலிசார் இது தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

பொலிசார் இதுபற்றி கூறுகையில், லோறன்ஸ் அவெனியு மற்றும் ஸ்காபுரோ ஹொல்வ் கிளப் வீதியில் இரவு 10-மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் மீது ஐந்து துப்பாக்கி சூடுகள் சுடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டவர்கள் சிறுவனை இலக்கு வைத்து சுட்டார்களா அல்லது தவறாக அடையாளம் காணப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் அந்த சிறுவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

0 157

தான் ஆட்சியில் இருந்தபோது, 2012இல், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை கொல்வதற்காக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களை தூண்டி விட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அப்போது அதிபர் மாளிகைக்கு வெளியே நடந்த மோதலில் செய்தியாளர்களும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டனர்.
தற்போதைய அதிபர் அப்துல் அல் சிசி அவர்களால் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பல ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய அதிபர் நீதித்துறை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.

0 150

பாலிவுட் நடிகர் சல்மான் கான் (49) கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பரில் மும்பை, பாந்த்ரா பகுதியில் ஓட்டி வந்த டொயாட்டோ லேண்ட் குரூசர் கார், தாறுமாறாக ஓடி நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக அரசு தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, விபத்து நடந்தபோது காரை சல்மான்கான் ஓட்டவில்லை. அவரது டிரைவர் தான் காரை ஓட்டினார் என்ற சல்மானின் வாக்குமூலத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. விபத்து நடைபெற்ற போது காருக்குள் மூன்று பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். 4வது நபர் யாரும் காருக்குள் இருக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் தனது வாதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் கடந்த 12 வருடங்களாக 4வது நபர் காருக்குள் இருந்ததாக தெரிவிக்காமல், தற்போது தெரிவிப்பது ஏன் என அவர் கேள்வியெழுப்பினார். ஆனால் சல்மானின் தரப்பு தனது இறுதி வாதத்தின் போது, அவர் காரை ஓட்டவில்லை என தொடர்ந்து வாதம் செய்தது.

இந்த வழக்கில் ஆதாரங்களும், சாட்சியங்களும் சல்மானுக்கு எதிராக உள்ளதால் அவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

0 153

டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவமனையை சேர்ந்த 31 வயது டாக்டர் ஒரின சேர்க்கை கணவரால் சித்ரவதை செய்யபட்டு உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் இந்த விவரம் அவரது பேஸ் முக் மூலம் தெரியவந்தது.
பிரியா வேதி (வயது 31) எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் ஓட்டலில் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். பிரியா வேதி தனது பேஸ் புக்கில் 4 பக்க தற்கொலை கடிதம் ஒன்றை பதிவு செய்து இருந்தார்.. அதில் தனது கணவர் ஒரின சேர்க்கை பழக்கம் உடையவர் என்றும் அவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மன ரீதியாக கொடுமை படுத்தியதாகவும் கூறி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பிரியா வேதியின் கணவரை கைது செய்தனர். பிரியா வேதியின் கணவரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டராவார்.
மேலும் அந்த கடிதத்தில் டாக்டர் பிரியா வேதி கூறி இருப்பதாவது:-
எனக்கும் எனது கணவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை எந்த திருமண பந்தமும் ஏற்படவில்லை.நாங்கள் இதுவரை உடல் ரீதியா இணையவும் இல்லை. அவரது லேப்டாபில் அவர் போலி இமெயில் ஐடி மூலம் பலவேறு ஓரின சேர்க்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்வார்.இது தெரிந்தும் மனைவி என்ற வகையில் நான் அவருக்கு உதவி செய்து வந்தேன்.ஆனால் அவர் என்னை மனவேதனை படுத்தி வந்தார்.கடந்த இரவில் அவர் என்னை உணர்வு பூர்வமாக மிகவும் கொடுமை படுத்தினார் என்னை மூச்சு விட முடியாமல் செய்தார்.
நீ ஒரு மனித ஜென்மம் கிடையாது நீ ஒரு பிசாசு என்னிடம் இருந்து எனது உயிரை எடுத்து கொண்டாய்” என அந்த கடிதத்தில் பிரியா வேதி கூறி உள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-
பிரியா எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டராவார். ஞாயிற்று கிழமை காலை ஓட்டல் அறையில் அவர் பிணமாக கிடந்த விவரம் தெரிய வந்த்து. கடந்த சனிக்கிழமை பிரியாவின் கணவர் மனைவியை காணவில்லை என புகார் அளித்து உள்ளார். என கூறினார்.

0 173

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் இணையதளங்கள் மூலமாக ஷொப்பிங் செய்ய விரும்புவதாக சமீபத்தில் சுவிஸ் புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
புள்ளியியல் துறை மேற்கொண்ட ஆய்வில், 16 முதல் 74 வயதுடைய சுமார் 62 சதவிகித மக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இணையதளங்கள் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய சுவிஸ் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலேயே இணையதளங்கள் மூலம் ஹொப்பிங் செய்வதில் பிரித்தானியா 72 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும் டென்மார்க் 66 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மூன்றாம் இடத்தில் உள்ள சுவிஸிற்கு அடுத்தப்படியாக 61 சதவிகிதத்துடன் ஜேர்மனி உள்ளது.

ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இணையதளம் மூலமாக ஷொப்பிங் செய்வதில் சராசரியாக 41 சதவிகிதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இணையதளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதில் சுவிஸ் மக்கள், ஐரோப்பிய நாடுகளின் சராசரி அளவான 19 சதவிகிதத்தை விட குறைவாக 16 சதவிகித அளவிலேயே உள்ளனர்.

இருப்பினும், பொருட்களை வாங்குவதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது இணையதளம் மூலம் பொருட்களை வாங்குவதும் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கி சேவைகளை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், இணையதளம் மூலம் ஷொப்பிங் செய்யும்போது ஏற்படும் தொழிநுட்ப குறைபாடுகள், இணையதளங்கள் மூலம் நடைபெறும் பண மோசடிகள் உள்ளிட்டவைகள் 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக புள்ளியியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 151

700க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற பட­கொன்று மத்­தி­ய­தரைக் கடலில் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வேளையில் மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த பெரு­ம­ள­வானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

இத்­தா­லிய தீவான லம்­பெ­து­ஸாவின் தெற்கே மூழ்­கிய அந்தப் படகில் பயணம் செய்த சுமார் 28 பேர் உயி­ரு டன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் படகில் பய­ணித்­த­வர்­களை மீட் கும் முக­மாக பிர­தான மீட்பு நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

மேற்­படி மீட்பு நட­வ­டிக்­கையில் இத்­தா­லிய கப்­பல்­களும் மத்­தி­ய­தரைக் கடல் தீவான மால்ட்­டாவின் கடற்­படை மற்றும் வர்த்­தக கப்­பல்­களும் ஈடு­பட்­டுள்ள.லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் 27 கிலோ­மீற்­றரும் லம்­பெ­துஸா தீவி­லி­ருந்து 210 கிலோ­மீற்­றரும் தொலை­வான பிராந்­தி­யத்தில் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

கடந்த வாரம் குடி­யேற்­ற­வா­சி­களின் பட­கொன்று மூழ்­கி­யதில் சுமார் 400 பேர் மூழ்கி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கின்ற நிலையில் இடம்­பெற்­றுள்ள இந்தப் புதிய படகு அனர்த்தம் பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.

இந்த அனர்த்­தத்தில் பெரு­ம­ள­வான குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக மால்ட்டா பிர­தமர் ஜோசப் மஸ்கட் தெரி­வித்தார்.மேற்­படி படகில் சென்­ற­வர்கள் அவ்­வ­ழி­யாக சென்ற வாணிப கப்­ப­லொன்றின் கவ­னத்தை ஈர்க்க பட­கி­லி­ருந்து குதித்­த­தா­கவும் அவர்­களை மீட்க குறிப்­பிட்ட வாணிப கப்பல் சென்ற போது அந்தப் படகு கவிழ்ந்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் மீட்பு நட­வ­டிக்­கை­களில் மொத்தம் 20 கப்­பல்­களும் 3 உலங்­கு­வா­னூர்­தி­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.உயி­ருடன் மீட்­கப்­பட்­ட­வர்கள் கடா­னியா நகர கடற்­க­ரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.

கடந்த வருடம் வறுமை மற்றும் மோதல்கள் கார­ண­மாக ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 170,000 பேர் ஆபத்து மிக்க கடல் பய­ணத்தை மேற்­கொண்டு இத்தாலியை சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டதாக தரவுகள் கூறுகின்றன.

குடியேற்றவாசிகள் மேற்படி 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுடைய கடல் பரப்பை அளவுக்கதிகமானோரை ஏற்றிச் செல்லும் மோசமான நிலையிலுள்ள பாதுகாப்பற்ற படகுகளில் கடக்க முயற்சிப்பது வழமையாகவுள்ளது.

0 52

1942ஆம் வருடம் மும்பையிலிருந்து இங்கிலாந்திற்கு நாணயங்களைக் கொண்டுசெல்லும்போது கடலில் மூழ்கிய சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற கப்பலின் சிதிலங்களிலிருந்து 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன

சிட்டி ஆஃப் கெய்ரோ கப்பலிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளிக் காசுகள்.

எஸ்எஸ் சிட்டி ஆஃப் கெய்ரோ என்ற இந்தக் கப்பல் செயிண்ட் ஹெலனாவுக்குத் தெற்கில் 772 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த யு – போட் அதனை குண்டுவீசித் தாக்கியது. இதில் அந்தக் கப்பல் 5,150 மீட்டர் ஆழத்தில் மூழ்கியது.

இதில் 100 டன் எடையுள்ள வெள்ளி நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்கள் பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமானவை.

இங்கிலாந்தின் யுத்தச் செலவுக்காக இந்த பணம் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது.

ஆனால், 1942 நவம்பர் 6ஆம் தேதியன்று இந்தக் கப்பலைக் கண்ட யு-போட் அதன் மீது குண்டு வீசியது.

அந்தக் கப்பலைக் கைவிட்டுவிட்டு, தப்பிக்க ஊழியர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், சிட்டி ஆஃப் கெய்ரோ மீது இன்னொரு குண்டும் வீசப்பட்டது. அதோடு, அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.

2011ல் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது

இந்தக் கப்பலும் அதிலிருந்த நாணயங்களும் தொலைந்தே போய்விட்டன என்றுதான் 2011ஆம் ஆண்டுவரை கருதப்பட்டது.

சிட்டி ஆஃப் கெய்ரோ கப்பல் கடலடியில் கிடப்பது 2011ல் கண்டுபிடிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டில், தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியை ஜான் கிங்க்ஸ்ஃபர்ட் என்ற பிரிட்டிஷ் மீட்பு நிபுணர் தலைமையிலான அணி சோதனை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது, கடலடிப் பகுதிகளைத் தவிர, வேறு ஏதோ ஒரு மர்மமான பொருளும் அங்கே இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்குப் பிறகு, ஐக்கிய ராஜ்ஜிய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. கடலடியில் தேடும் வீரர்கள் பல வாரங்களுக்கு, கடலடிப் பகுதியை தேடினார்கள்.

“கிட்டத்தட்ட லண்டனைப் போல இரு மடங்கு பரப்பு தேடுதலுக்குள்ளாக்கப்பட்டது” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கிங்க்ஸ்ஃபோர்ட்.

கடைசியில் சிட்டி ஆஃப் கெய்ரோ கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த 34 மில்லியன் பவுண்டு புதையலில் பெருமளவு மீட்கப்பட்டது.

அந்தக் காசுகள் தற்போது பிரிட்டனில் உருக்கப்பட்டு, விற்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து கிடைக்கும் தொகை, அரசு கஜானாவுக்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படும்.

இந்தப் பணி, 2013 செப்டம்பரிலேயே முடிந்துவிட்டது. ஆனால், இது பற்றிய தகவல்களை வெளியில் சொல்வதற்கு பிரிட்டனின் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இப்போதுதான் அனுமதியளித்திருக்கிறது.

இந்தக் கப்பலைத் தாக்கி அழித்த இரண்டாவது டார்பீடோ வகைக் குண்டின் ஒரு பகுதியில் மீட்கப்பட்டது.

இந்தக் காசுகள் தவிர, இரண்டாவதாக வீசப்பட்ட குண்டின் புரொபெல்லரையும் இந்தத் தேடுதல் அணி மீட்டிருக்கிறது.

விதி வலியது

கப்பல் மூழ்கியதில், அப்போது கப்பலில் இருந்த 311 பேரில் ஆறு பேர் மட்டுமே இறந்தனர். ஆறு படகுகளில் மீதமிருப்பவர்கள் உயிர்தப்பினர்.

ஆனால், அவர்கள் வேறு ஒரு கப்பலால் பார்க்கப்பட்டு, காப்பாற்றப்படுவதற்கு மூன்று வாரங்களாகிவிட்டன. அதற்குள் தப்பிப்பிழைத்த 305 பேரில் 104 பேர் உயிரிழந்திருந்தனர்.

வெள்ளியால் ஆன இந்த நாணயங்கள் யுத்தச் செலவுக்காக இங்கிலாந்திற்குச் சென்றுகொண்டிருந்தன.

பிரிட்டிஷ் கப்பலான க்ளான் ஆல்பைன், 154 பேரை மீட்டது. மீதமிருந்த 47 பேரை பிரிட்டிஷ் வர்த்தகக் கப்பலான பென்டோரன் மீட்டு, கேப்டவுனுக்கு அழைத்துச் சென்றது.

கடைசிப் படகு, கப்பல் மூழ்கி 51 நாட்களுக்குப் பிறகு தென்னமெரிக்கக் கரைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்தவர்களில் இரண்டுபேர் மட்டுமே உயிரோடு இருந்தனர்.

அந்த இரண்டு பேரில் ஒருவரான ஜேம்ஸ் ஆலிஸ்டர் ஒயிட் வேறு ஒரு கப்பலில் நாடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மற்றொரு யு – போட் தாக்கியதில் அந்தக் கப்பலும் மூழ்கியது. அதில் ஜேம்ஸ் உயிரிழந்தார்.

0 57

இந்தியப் பெருங்கடலில் ஓராண்டுக்கு சற்று முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும் மூன்று நாடுகள் , அடுத்த மாதத்துக்குள் இந்த முயற்சியில் வெற்றி கிட்டாவிட்டால், தேடும் கடல் பரப்பை இரட்டிப்பாக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறுகின்றன.
முதலில் தேடும் எல்லையாக வைக்கப்பட்ட சுமார் 60,000 சதுர கிமீ பரப்பில் மட்டும் தேடியுள்ள இந்தத் தேடும் குழுக்கள் , இதுவரை காணாமல் போன விமானத்தின் துகள்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.
கோலாலம்பூரில் சீன, ஆஸ்திரேலிய மற்றும் மலேசிய நாடுகளின் அமைச்சர்கள் நடத்திய சந்திப்புக்குப் பின்னர், இந்த விமானம் பறந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட வான்பாதையின் வழியாக, மேலும் 60,000 கிமீ பரப்பளவுள்ள கடல் பரப்பில் தேடுவதை விஸ்தரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது140412120608_mh370_aviao_navio_512x288_afp_nocredit

0 46
பெய்ஜிங்,
வான்வழியிலேயே எதிரிகளின் ஆயுதங்களை இடைமறித்து தாக்கவல்ல  மிகவும் அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்பனை செய்ய ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. 3 பில்லியன் டாலர் செலவில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை  இணைப்பதின் மூலம் உலகின் மிகப்பெரிய ராணுவமான சீன ராணுவம் மேலும் வலுப்பெறும் என்று அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
எஸ்-400 என்ற அழைக்கப்படுகிற இந்த ஏவுகணை புதிய தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை, எந்த வான்வழி இலக்கையும் எட்டுகிற ஆற்றல் வாய்ந்தது ஆகும். அதுமட்டுமின்றி, கப்பல் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளையும் தாக்க வல்லது. இது ஒரு வினாடிக்கு 4.8 கிலோ மீட்டர் வேகத்தில் பாயக்கூடியது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து இவ்வகை அதி நவீன ஏவுகணையை வாங்கும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.  சீனாவுக்கு ரஷியா அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்வதை ரஷிய அரசின் ஆயுத வர்த்தக நிறுவனம் ராசோபோரோ ஏற்றுமதி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

201504161423339425_Russia-to-sell-its-most-modern-missile-defence-system-to_SECVPF

0 52

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய இளம்பெண்ணை கார் ஏற்றி கொல்ல காதலன் முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் இளம்பெண் பலத்த காயமடைந்து உள்ளார். அவரை காப்பாற்ற சென்ற மற்ற 5 பேரும் காயமடைந்துள்ளனர்.

கேரளாவில் அரிம்பூர் என்ற இடத்தில் பி.காம் பட்டதாரியான 22 வயது நிறைந்த இளம்பெண் கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை காதலித்து வந்த ஷெபின் என்ற 21 வயது வாலிபர் ஆவேசத்துடன் தனது காரை அவர் மீது மோதி உள்ளார். இதனால் இளம்பெண் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்காக வந்த 5 பேர் மீதும் காரை பின்புறமாக ஏற்றி வாலிபர் கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களில் இருவருக்கு பலத்த காயம ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு பிராணவாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஷெபின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தனது காரை விட்டு விட்டு தனது பெற்றோருடன் தப்பி ஓடி விட்டார் என போலீசார் கூறியுள்ளனர்.

சமீபத்தில், தொழிலதிபர் ஒருவர் தனது ஆடம்பர குடியிருப்பில் இருந்து ஆடம்பர காரில் வெளியே வந்தபோது பாதுகாவலர் மீது காரை கொண்டு மோதினார். இதில் பாதுகாவலர் உயிரிழந்தார். இதனை அடுத்து தற்பொழுது நடந்துள்ள மற்றொரு சம்பவத்தால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

RANDOM POSTS

0 154
ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும்...