Monday, August 21, 2017
Featured
Featured posts

    0 154

    ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.

    அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும் போது அவர்கள், அதன் பின்பக்கத்தில் அமர்ந்து புத்தகம் படித்தல், மின்னஞ்சல் பார்த்தல் போன்ற அன்றாட வேலைகளையும் செய்தாக வேண்டும்.

    ஓட்டுநரில்லா கார்கள் இனியும் வெறும் விஞ்ஞானக் கதைகளில் வரும் கற்பனைக் கதையல்ல. நம் தலைமுறையில் நடைமுறைக்கு வரப்போகும் நிஜம் என்பதை விவரிக்கும் காணொளி

      0 139

      லண்டனில் பசுவின் கோமியம் கடைகளில் விற்கப்படுவதை பிபிசியின் ஆசிய பிரிவு சேவை கண்டறிந்துள்ளது.

      லண்டனில் இருக்கும் தெற்காசியக்கடைகளில் கோமூத்ரா என்கிற பெயரில் விற்கப்படும் இந்த பசுவின் கோமியத்தை பிபிசி செய்தியாளர் காசு கொடுத்து வாங்க முடிந்தது.

      இந்த கடைகள் எல்லாமே உணவுப்பொருட்களையும் விற்கும் கடைகள். ஒரு கடையில் இந்திய துணைக்கண்டத்தின் அன்றாட உணவான ரொட்டிகளுக்கு அருகில் இந்த கோமியமும் அடுக்கி வைத்து விற்கப்பட்டது.

      “இந்துக்கள் இதை மத காரணங்களுக்காக வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க இந்த கோமியம் தெளிக்கும் மத சடங்குகள் நடப்பது வாடிக்கை” என்று இதை விற்கும் கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

      கடைகள் மட்டும் இந்த கோமியத்தை விற்கவில்லை. வாட்ஃபோர்டில் இருக்கும் ஹரேகிருஷ்ணா கோவிலான பக்திவேதாந்தா மனோரில் இருக்கும் பால்பண்ணையில் பசுவின் கோமியம் பக்தர்களுக்காக சேகரித்து விற்கப்படுகிறது.

      இந்த கோவிலின் நிர்வாக மேலாளர் கவுரி தாஸ் வடிகட்டப்பட்ட கோமியத்தை தாங்கள் 1970களின் ஆரம்பத்தில் இருந்தே விற்பதாக தெரிவித்தார்.

      தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதை பூஜைக்காகவும் மருத்துவத்துக்காகவும் தூய்மைப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதாக அவர் கூறினார். அந்த கோவிலில் இருக்கும் பிரதீப் என்பவர் கோமியத்தைக் குடித்துக்காட்டினார். அது கொஞ்சம் கசப்பு மருந்துபோல இருப்பதாக அவர் கூறினார்.

      ஒரு நாளைக்கு மூன்று முறை கோமியம் குடிப்பதாக தெரிவிக்கும் பிரதீப், தனது செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் அல்சர் வராமல் தடுப்பதாக்வும் ஒட்டுமொத்தத்தில் தனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறினார்.

      இது குறித்து அறிக்கை மூலம் கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் உணவுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பேச்சாளர், “பசுவின் சிறுநீரை மனிதர் உட்கொள்ள விற்பது சட்டவிரோத செயல். அதேசமயம் உடலின் மேலே பூசுவதோ, தெளிப்பதோ உணவாக கருதமுடியாது என்பதால் இதன் விற்பனை உணவு சட்டங்களின் கீழ் வராது. ஆனால் இதை வேறு சில சட்டங்கள் மூலம் கையாளலாம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

      கோமியம் விற்கப்படும் பாட்டில்களின் மேல் இந்தி மொழியில் இது பசுவின் கோமியம் என்றும் இது மதப்பயன்பாட்டுக்கானது என்றும் எழுதப்பட்டுள்ளது.

      ஹரே கிருஷ்ணா கோவிலின் ஹரி தாஸ் இதை தாம் மனிதர்கள் உட்கொள்ள விற்பதில்லை என்று தெரிவித்தாலும் இதை என்ன செய்வது என்பது பக்தர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

      மேலும் கோமியத்தைக் குடிப்பவர்களைப் பார்த்து விமர்சிப்பது போலியானது என்றும் அவர் தெரிவித்தார். “மனிதர்கள் மாட்டின் நாக்கையும் வாலையும் சாப்பிடலாம் ஆனால் அதன் கோமியத்தைக் குடிக்கக்கூடாது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”, என்றார் அவர்.

      இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான அமைப்பின் பேச்சாளர், “பசுவின் கோமியத்தை உட்கொள்வதற்காக விற்பவர்கள் அது பாதுகாப்பானது தானா என்பதை உறுதி செய்யவேண்டும். தாங்கள் விற்கும் பண்டம் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அதை அவர்கள் விற்கக்கூடாது”, என்று தெரிவித்தார். உணவுப்பண்டங்களுக்கு அருகே கோமியத்தை வைத்து விற்கக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

      லண்டன் கடைகளில் 50 மிலி லிட்டர் கோமியம் ஒரு பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு விற்கப்படுகிறது.

      செய்தி சேகரிப்பு: செஜ் அசார், பிபிசி ஏசியன் நெட் ஒர்க், லண்டன்.

        0 132

        அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று , புதன்கிழமை மாலை அவர் காலமானார் என்று அவரது மகன்களில் ஒருவரான, டாக்டர் ஏ.ஆர்.பகீரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

         

        மங்கையர்க்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி, இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார். ராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர், பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்தார்.

         

        அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையர்க்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

         

        இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.

         

        இந்திய அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோருடன் மங்கையர்க்கரசி உறவுகளைப் பேணி வந்தார்.

         

        காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்குகள் லண்டனில் எதிர்வரும் 20ம் தேதி நடைபெறும் என்று டாக்டர் பகீரதன் தெரிவித்தார்.

         

        பகீரதன் தவிர, மங்கையர்க்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

         

        அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

        (BBC)

          0 123

          ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று ஹவாயில் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

          இந்த உயிரினம் கிட்டத்தட்ட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

          நேக்கர் தீவிலிருந்து கிட்டத்தட்ட 2.5 மைல்கள் தொலைவில் வைத்து, நீரின் அடியில் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனம் ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளது.

          கரங்கள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

          இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான `கஸ்பர்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

            0 109

            இதில் தொடர்புடைய அனைவருடனும் தம்மால் பேச இயலவில்லை என்பதால், இதற்கான வாக்குகள் வாங்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும் இந்த விசாரணையை மேற்கொண்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

            இது குறித்து விசாரிக்கும்படி, ஜெர்மன் கால்பந்தாட்டக் கழகம் இந்த சட்ட நிறுவனத்திடம் கோரியிருந்தது.

            2005ஆம் ஆண்டு, ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகம் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு 6.7 மில்லியன் யூரோ கொடுத்திருந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விசாரணை அறிவிக்கப்பட்டது.

            இந்த நிதி எதற்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து, உலக கோப்பை ஏற்பாட்டுக் குழு தவறான தகவலைத் தந்ததாக இந்த விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

            (BBC)

              0 95

              சிறைச்சாலை பஸ் ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட பாதாள உலகத் தலை­வர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் தெமட்­ட­க்கொட சமிந்த மீது தெமட்­டக்­கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே நேற்று துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

               

              பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­திர உள்­ளிட்ட நால்­வரின் படு­கொலை விவ­காரம் தொடர்பில் நேற்று கொழும்பு மேல் நீதி­மன்றில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் பின்னர், அவ்­வ­ழக்கின் சந்­தேக நபர்­களை வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே, சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நேற்று பிற்­பகல் 3.40 மணி­ய­வில் இச் சம்பவம் இடம்பெற்றது.

               

              இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதிசிங்கவின் தலமையில் இன்று முழுவதும் கொழும்பு நகரில் உள்ள பல சீ.சி.டி.வி. கண்காணிப்பு கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

               

              இதன் போது துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள, சந்தேக நபர்கள் பயணித்ததாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைபிரிட் ரக காரின் பயணப் பாதை, குறித்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

                0 42

                குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியிலுள்ள அந்தப் பள்ளிக்கூடத்திலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

                இந்தப் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறு வயது சிறுவன், எச்.ஐ.வி தொற்றினால் பாதிககப்பட்டுள்ளார் என பரவிய வதந்திகளையடுத்தே, பெற்றோர் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை தவிர்த்து வருகின்றனர் என அங்கு சென்றிருந்த பிபிசியின் பிரசாத் பூர்னிமால் ஜெயமான்ன கூறுகிறார்.

                இந்த சிறுவனின் தந்தை நோய் காரணமான மரணமான நிலையில், அவர் எச்.ஐ.வி. தொற்றுக் காரணமானவே உயிரிழந்தார் என அந்த பிரதேசம் முழுவதிலும் வதந்தி பரவியது.

                இதனால் அச்சிறுவனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அவரது தயார் போராடினார்.

                இறுதியாக இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளால் சிறுவனை பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

                0 96

                ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  31 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை  ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின்போது  உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு  மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு  விளக்கம் அளிக்கவுள்ளார்.

                செய்ட் அல் ஹுசேன் தனது உரையில்  இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை  அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

                மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு  தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரழ் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.

                எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என  கூறப்படுகின்றது.  அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட  சர்வதேச நிறுவனங்கள்  இலங்கை   தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளன.   ஏற்கனவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் ஒன்றை நிறுவவேண்டும் என  சர்வதேச  மன்னிப்புச் சபை  தெரிவித்துள்ளது.

                இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி  ரவிநாத ஆரியசிங்க  தலைமையிலான குழுவினர்  31 ஆவது கூட்டத்  தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

                உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள்,  முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.

                  0 43

                  அமலாக்கப் பிரிவின் குற்றப் பத்திரிக்கையின்படி, “குற்றம்சாட்டத்தக்க போதுமான ஆதாரங்கள்” இருப்பதாகக் கூறி இந்த சம்மன் விடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

                   

                  மாறன் சகோதரர்கள் தவிர, கலாநிதி மாறனின் மனைவி காவிரி கலாநிதி, சவுத் ஏஷியா எஃப்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. ஷண்முகம் உள்ளிட்டோரும் ஜூலை 11ஆம் தேதி ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி கூறியுள்ளார்.

                   

                  அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்றும் புதிதாக ஏதாவது புகார்கள் இருந்தால் பதிவுசெய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

                   

                  கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டி, சிவசங்கரனின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

                   

                  தற்போது, நிதி முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஆறு பேர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவுசெய்துள்ளது.

                   

                  மொரீஷியஸிலிருந்து செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் மூலமாக கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் சவுத் ஏஷியா எஃப் எம் மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்களுக்கு முறையே 549.03 கோடி மற்றும் 193.55 கோடி ரூபாய்களை பெற்றதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சுமத்தியுள்ளது.

                   

                  இந்தக் குற்றச்சாட்டுகளை மாறன் சகோதரர்கள் மறுத்துவருகின்றனர்.

                  (BBC)

                  0 97

                  அமெரிக்காவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகமோ எதிர்வரும் 2044ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள் என கணித்துள்ளது.

                  இருப்பினும், இவர்கள் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளனர்.

                  ஆனால் யாருக்கு அதிகம் இழப்பு?

                  ஆஸ்கார் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடாமி விருதுகள் தொடங்கி 88 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுக்கான தேர்வும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறுகிறது.

                  சிறந்த நடிகர், நடிகை, துணை நடிகர்கள் என முக்கியப் பிரிவுகளில் வெள்ளையர்களின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

                  மைக்கேல் பி ஜோர்டான், இத்ரிஸ் எல்பா போன்ற கருப்பின நடிகர்கள் முக்கிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

                  கருப்பின நடிகர்கள் அகாடமி விருதுகளுக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் எனும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

                  அந்த விருதுகளுக்கு வாக்களிக்கவுள்ளவர்கள் யாரென்பதை மனதில் வைத்தே ஆப்ரிக்க-அமெரிக்க நடிகர் மற்றும் நடிகைகளுக்கு போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

                  அகாடமியிலுள்ள 6,000 உறுப்பினர்களில் 94% வெள்ளையினத்தவர்.

                  இதன் காரணமாக இந்த ஆண்டு பல பிரபலங்கள் விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இயக்குநர் ஸ்பைக் லீ மற்றும் நடிகை ஜாடா பிண்கெட் ஆகியோர், தமது எதிர்ப்புகளைத் தெரிவிப்பதற்காவே விழாவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.

                  ஆஸ்கார் விருதுகளில் பன்முகத்தன்மை இல்லை என சமூக ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.

                  கடந்த ஆண்டும் விருதுகளுக்கு “வெள்ளையடிக்கப்பட்டன” என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

                  RANDOM POSTS

                  0 154
                  ஓட்டுநர் இல்லாத கார்களில் பயணித்து, பணியாற்றுவதற்காக சாதாரண ஆட்கள் நூறு பேரை சுவீடன் நாட்டு ஓல்வோ கார் தயாரிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கார்கள் ஜன நெரிசல் மிக்க தெருக்களில் செல்லும்...